விளையாட்டு

சுக்மா: நீச்சல் போட்டியில் தேசிய அடைவு நிலை புதுப்பிக்கப்பட்டது

21/08/2024 06:37 PM

கூச்சிங், 21 ஆகஸ்ட் (பெர்னாமா) -- சுக்மா விளையாட்டுப் போட்டியில், சிலாங்கூர் நீச்சல் வீரர் ஆண்ட்ரூ கோ (ANDREW GOH) தமது தேசிய அடைவு நிலையை புதுப்பித்துள்ளார்.

50 மீட்டர் பிரிவில் களம் கண்ட, 20 வயதான ஆண்ட்ரூ  28.03 வினாடிகள் பதிவு செய்து முதல் இடத்தை பிடித்தார்.

இதன் மூலம் 2023-ஆம் ஆண்டு கோலாலம்பூரில் நடைபெற்ற மலேசிய நீச்சல் போட்டியில் பதிவு செய்த 28.10 வினாடிகளை அவர் முறியடித்துள்ளார்.

மேலும், இந்த வெற்றியின் மூலம், சுக்மா விளையாட்டுப் போட்டியின் அடைவு நிலையான 28.86 வினாடிகளையும் ஆண்ட்ரூ  புதுப்பித்திருக்கிறார்.

சபாவின் இம்மானுவேல் லோ யுங் மிங் (Emmanuel Loh Yung Ming) 30.08 வினாடிகள் பதிவு செய்து இரண்டாவது இடத்தையும், 30.53 வினாடிகள் பதிவு செய்து பகாங்கின் லூ ஜீ யீ (Loo Jhe Yee) மூன்றாவது இடத்தையும் வென்றனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)