விளையாட்டு

எடை தூக்குதல் போட்டியில் முஹமட் இஸ்ஸான் தங்கம்

23/08/2024 08:31 PM

கூச்சிங், 23 ஆகஸ்ட் (பெர்னாமா) -- சுக்மா என்பது இளம் விளையாட்டு வீரர்கள் தங்கள் திறனை வெளிப்படுத்துவதற்கான ஒரு மேடை என்பதை அதன் மீண்டும் மீண்டும் நிரூபனமாகிறது.

திரெங்கானுவைச் சேர்ந்த, முஹமட் இஸ்ஸான் இஸ்மாடி 96 கிலோகிராம் பிரிவில் எடை தூக்குதல் போட்டியில் தங்கம் வென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

அதோடும், அவர் தேசிய சாதனையை முறியடித்து வரலாறு படைத்தார்.

21 வயது திடல்தட வீரரான அவர், 2023 ஆம் ஆண்டில் தமது சகநாட்டவரான முஹமட்  சியாஹிர் தேராவின் முந்தைய சாதனையை முறியடித்துள்ளார். 

170 கிலோகிராம் உடன் மொத்தமாக 313 கிலோ எடை தூக்கில் அவர் முதலிடம் பிடித்தார். 

இரண்டாம் இடத்தில், 309 கிலோ  எடையை தூக்கி கூட்டரசு பிரதேசத்தைச் சேர்ந்த அப்திலா இயாத் அப்துல் ஜலீல் வெள்ளிப் பதக்கத்தை வென்றார், 

சபாவின்,  அலியானாஃபியா 262 கிலோகிராம் சாதனையுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)