BREAKING NEWS   Paris route represents Malaysia Airlines’ 68th destination and will be served by A350-900 aircraft - Capt Izham | 
 உலகம்

மருத்துவர் பாலியல் பலாத்கார விவகாரம்; உயர் அதிகாரியைப் பதவி விலகக் கோரி பேரணி

28/08/2024 03:23 PM

கொல்கத்தா, 28 ஆகஸ்ட் (பெர்னாமா) -- இந்தியாவின் கிழக்குப் பகுதியில், உயர் பதவியில் உள்ள அதிகாரியைப் பதவி விலகக் கோரி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க போலீசார் கண்ணீர் புகையையும் தண்ணீர் பீரங்கிகளையும் பயன்படுத்தினர்.

இம்மாதத் தொடக்கத்தில் மருத்துவர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டது தொடர்பான விசாரணையைச் சம்பந்தப்பட்ட அந்த அதிகாரி தவறாகக் கையாண்டதாகக் கூறி, அவர் பதவி விலக நெருக்குதல் அளித்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி, கொல்கத்தா நகரில் உள்ள கர் மருத்துவக் கல்லூரியில் பணியில் இருந்தபோது அம்மருத்துவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறையின் நீண்டகால பிரச்சினைக்கு எதிராக நாடு முழுவதிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

இந்தியா முழுவதிலும் உள்ள மருத்துவமனைகளில் சுகாதாரப் பணியாளர்கள் பாதிக்கப்படுவதை இச்சம்பவம் எடுத்துக்காட்டுவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறினர்.

சம்பந்தப்பட்ட அதிகாரி பதவி விலகக் கோரி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இந்து தேசியவாத பாரதிய ஜனதா கட்சியின் ஆர்ப்பாட்டக்காரர்கள் போலீசாரின் தடைகளை உடைத்து, மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை ஆளும் மம்தா பேனர்ஜியின் அலுவலகத்தை நோக்கி பேரணி நடத்தினர்.

போலீசார் இந்தப் பேரணிக்கு தடை விதித்து சாலைகளில் தடுப்பை ஏற்படுத்தினர்.

மேலும், ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க தடியடியும் நடத்தினர்.

அதோடு, பெரிய அளவிலான வன்முறையைத் தூண்ட முயன்றதாகக் குற்றஞ்சாட்டி பேரணிக்கு முன்னதாக நான்கு மாணவர் ஆர்வலர்களைப் போலீசார் கைது செய்தனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)