பொது

திடிஎம்மிற்கு 4 வாடகை ஹெலிகாப்டர்களை அனுப்ப அக்டோபர் வரை கால அவகாசம்

01/09/2024 05:39 PM

கோத்தா திங்கி, 01 செப்டம்பர் (பெர்னாமா) --  மலேசிய தரைப்படைக்கு UH-60A Black Hawk ரகத்திலான நான்கு வாடகை ஹெலிகாப்டர்களை அனுப்ப குத்தகை தரப்பினருக்கு வரும் அக்டோபர் மாதம் வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

வழங்கப்பட்ட கால அவகாசத்தைப் பின்பற்றத் தவறினால் சம்பந்தப்பட்ட ஹெலிகாப்டரை வாடகைக்குப் பெறுவதற்கான ஒப்பந்தத்தை அமைச்சு ரத்து செய்யும் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் நோர்டின் தெரிவித்தார்.

"(ஹெலிகாப்டரை) அனுப்புவதற்கு நாங்கள் அக்டோபர் மாதம் வரை கால அவகாசம் வழங்குகிறோம். அனுப்பப்படாவிட்டால் ரத்து செய்யப்படும்", என்று அவர் கூறினார்.

இன்று, ஜோகூர், கோத்தா திங்கியில், Felda Air Tawar 3 மண்டபத்தில் My Villa திட்டத்தைத் தொடக்கி வைத்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

சம்பந்தப்பட்ட நான்கு ஹெலிகாப்டர்களை அனுப்புவதில் தாமதத்தை ஏற்படும் நிலையில் அது தொடர்பாக MINDEF மேற்கொள்ளவிருக்கும் நடவடிக்கை குறித்து விவரிக்கையில் முஹமட் காலிட் அவ்வாறு தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)