பொது

கூட்டரசு சட்ட முறையிலான அமைப்புகளின் சீரமைப்பு ஆய்வு செயலகம் உடனடியாக செயல்படும்

03/09/2024 05:55 PM

புத்ராஜெயா, 03 செப்டம்பர் (பெர்னாமா) -- சட்ட முறையிலான அமைப்புகள் மற்றும் ஜிஎல்சி எனப்படும் அரசு சார்ந்த நிறுவனங்களின் செயல்பாடுகள், ஒன்று மற்றொன்றை போன்று இருப்பதை களைந்து, புதுப்பிக்கும் நோக்கத்தில்,  கூட்டரசு சட்ட முறையிலான அமைப்புகளின் சீரமைப்பு ஆய்வு செயலகம் நிறுவப்பட்டுள்ளது.

அச்செயற்குழு உடனடியாக செயல்படும் என்றும், நாட்டின் நிதி சேமிக்கப்படுவதை நிதி அமைச்சு தீவிரமாக கண்காணிக்கும் என்றும் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

"சட்ட முறையிலான அமைப்புகள் அதிகமாக உள்ளன. ஒன்று மற்றொன்றை போன்று இருப்பதை சீரமைப்பது கடினம். நெறிப்படுத்தப்பட வேண்டும். நிறைய தொடர்ச்சிகள் உள்ளன. செலவுகள் கட்டுப்பாட்டில் இல்லை. புதிய தலைவரை நியமிக்கும் போது, அவர் என்ன கார் பயன்படுத்துகிறார், அழகாக இருக்கும் அலுவலகத்தை சீரமைப்பது போன்றவற்றை நான் முதலில் கவனிப்பேன்," என்றார் அவர்.

இந்த இருவழி அதிகாரப் பதவியை உருவாக்குவது தொடர்பான ஒத்துழைப்பைப் பெறுவதற்கு இவ்விவகாரம் அமைச்சரவைக்கு தெரிவிக்கப்படும் என்றும் அன்வார் இப்ராஹிம் கூறினார்.

இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற நிதி அமைச்சு ஊழியர்களுடனான சந்திப்பு கூட்டத்தில் பேசிய போது பிரதமர் இதனைப் பகிர்ந்து கொண்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)