BREAKING NEWS   Paris route represents Malaysia Airlines’ 68th destination and will be served by A350-900 aircraft - Capt Izham | 
 பொது

பெர்னாமா வானொலியின் 17ஆம் ஆண்டு நிறைவு விழா

03/09/2024 06:47 PM

விஸ்மா பெர்னாமா, 03 செப்டம்பர் (பெர்னாமா) -- ஒலிபரப்புத் துறையில் ஏற்படும் மாற்றங்கள், பெர்னாமா வானொலி தொடர்ந்து பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய புதுமைகளை மேற்கொள்ள வழிவகுத்துள்ளது.

நேயர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய செய்தி மற்றும் உள்ளடக்கத்தை வழங்கும் பொறுப்பையும் அது கொண்டுள்ளது.

பெர்னாமா வானொலி தற்போது 17 ஆண்டுகளைக் கடந்து விட்டாலும் அண்மைய 
வளர்ச்சிகளுக்கு இணங்க மாற்றத்தை ஏற்பதால் இவ்வானொலி தொடர்ந்து நேயர்களின் தேர்வாக உள்ளது.

2007-ஆம் ஆண்டு Radio24-ஆக தொடங்கப்பட்ட பெர்னாமா வானொலி,  கிள்ளான் பள்ளதாக்கில் உள்ள நேயர்களுக்கு 24 மணி நேரமும் செய்திகளை ஒலிப்பரப்பும் சேவையை வழங்கியது.

உள்ளடக்கத்தைப் பல்வகைப்படுத்துதல், சேவையின் தரத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் பெர்னாமா வானொலி,  35 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய நேயர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்துள்ளது.

பெர்னாமா வானொலியின் அடைவுநிலை, வியூக பங்காளிகளிடமிருந்து அதிகமான ஆதரவைப் பெறுவதோடு, பரவலாகவும் அறியப்பட்டுள்ளதாக பெர்னாமா தலைமை செயல்முறை அதிகாரி நூருல் அஃபிடா கமாலுடின் தெரிவித்தார்.

இன்று, விஸ்மா பெர்னாமாவில் நடைபெற்ற பெர்னாமா வானொலியிம் 17-ஆம் ஆண்டு நிறைவு விழாவின்போது, அவர் அவ்வாறு கூறினார்.

பெர்னாமா தலைமை செய்தி ஆசிரியர் அருள்ராஜு துரைராஜ்,  செய்திப் பிரிவு துணை தலைமை செய்தி ஆசிரியர் நஸ்ரியா டாருஸ், பொருளாதார செய்திப் பிரிவு துணை தலைமை செய்தி ஆசிரியர் அஸ்லினா அஸிஸ் மற்றும் தொலைக்காட்சி மற்றும் வானொலி பிரிவுகளின் தலைவர் முஹமட் ஷுக்ரி இஷாக் ஆகியோரும் அந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)