பொது

பெத்தாய் மரத்தில் இருந்து கீழே விழுந்த நபர் பலி

05/09/2024 08:01 PM

லாருட், 5 செப்டம்பர் (பெர்னாமா) -- கம்போங் சாங்கட் பேராவில் உள்ள தோட்டத்தில் 10 மீட்டர் உயரமுள்ள பெத்தாய் மரத்தில் இருந்து கீழே விழுந்த நபர் பலியானார். 

54 வயதுடைய ஹபீஸ் முகமட் இசா ம்பவம் நடந்த இடத்திலேயே உயிரிழந்ததாக உறுதிசெய்யப்பட்டது என்று செலமா போலீஸ்த் தலைவர் சருடின் சமா தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவரை அவரது நண்பர் காலை 11 மணிக்கு ஆபத்தான நிலையில் கண்டதாகவும் அதன் பின்னர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததாகவும் அவர் கூறினார்.

தமது 20 வயதிலிருந்தே  மரங்களில் ஏறுவது உட்பட தோட்ட வேலைகளை செய்வதற்கு ஊதியம் வாங்கியதாக தெரிய வந்துள்ளது.

முகமட் இசாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக செலாமா மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டு பின்னர், அடக்கம் செய்ய கொண்டுச் செல்லப்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)