இஸ்லாமிய நிதியத்தில் முன்னணியில் இருக்கும் மலேசியாவின் பலத்தின் மூலம் ரஷ்யா பயன்பெற்றுக் கொள்ளலாம்

05/09/2024 07:41 PM

ரஷ்யா, 05 செப்டம்பர் (பெர்னாமா) -- இஸ்லாமிய நிதியத்தில், உலகளவில் முன்னணியில் இருக்கும் மலேசியாவின் பலத்தின் மூலம் ரஷ்யா பயன்பெற்றுக் கொள்ளலாம் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

இது ஷரியா கொள்கைக்கு இணங்குவது உட்பட நிதி கருவிகளில் புத்தாக்கத்தை ஏற்படுத்தும் சிறந்த சுற்றுச்சூழல் அமைப்பை மலேசியா கொண்டிருப்பதால், இரு நாடுகளுக்கும் இடையே ஒத்துழைப்பு வழங்க இஸ்லாமிய நிதி பொருத்தமானதாக இருக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

''ரஷ்யா, இஸ்லாம் மக்கள் தொகையை அதிகம் கொண்டிருப்பதால் இஸ்லாமிய நிதியில் மிக பெரிய திறன் கொண்டுள்ளது. ரஷ்யாவில் இஸ்லாமிய வங்கி அறிமுகப்படுத்துவன் மூலம் ஒன்றிணைந்து நடத்தும் திட்டங்களை எளிதாக்கி கொடுக்கும் என்று நான் நம்புகிறேன். அதோடு, இஸ்லாம் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்டிருக்கும் நாடுகளின் முதலீடுகளை இது ஈர்க்கும்,'' என்றார் அன்வார்.

இன்று, ரஷ்யா, விளாடிவோஸ்டாக்கில் நடைபெற்ற 9-ஆவது கிழக்கு பொருளாதார கருத்தரங்கு, ஈ.ஈ.எஃப்-இல் கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் அவ்வாறு கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)