பக்துன்க்வா, 24 நவம்பர் (பெர்னாமா) -- பாகிஸ்தானில் வடமேற்கு பகுதியில் நிகழ்ந்த வன்முறை சம்பவத்தில் மேலும் 18 பேர் கொல்லப்பட்ட வேளையில் 30 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த வாரத்தில், முன்னதாக போக்குவரத்து அணிவகுப்பு மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இச்சம்பவம் அங்கு மேலும் பதற்றத்தை நிலவச் செய்துள்ளது.
பழங்குடி மாவட்டத்தில் வெள்ளிகிழமை இரவு, ஆயுதமேந்தியவர்கள், ஒரு கிராமத்தில் தாக்குதல் நடத்தியதாக, கைபர் பக்துன்க்வா மாகாண தலைமை அதிகாரி நதீம் அஸ்லாம் சௌத்ரி தெரிவித்தார்.
பழிவாங்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பெட்ரோல் நிலையங்களுக்குத் தீ வைத்து சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை தொடங்கிய இந்தத் தொடர் சம்பவங்களின் பலி எண்ணிக்கை 58ஆக உயர்ந்துள்ளது.
பக்துன்க்வா மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)