விளையாட்டு

குண்டு எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார் முஹமட் சியாட்

04/09/2024 07:53 PM

பாரிஸ், 04 செப்டம்பர் (பெர்னாமா) --  குண்டு எறிதல் போட்டியில் மலேசியாவின் திடல்தட வீரர் முஹமட் சியாட் சூல்கிப்ளி  வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்,

2020 தோக்யோ பாராலிம்பிக்கில், தாமதமாக வந்ததால் போட்டியில் பங்கேற்ற முடியாமல்போன அவர், இம்முறை 20 நிமிடங்கள் முன்னரே வருகைத் தந்து தமது வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்தார்.

விட்ட இடத்தை பிடிப்பதற்காக, இம்முறை ஆடவருக்கான F20 குண்டு எறிதல் போட்டியில், களமிறங்கிய 34 வயதுடைய சியாட், அதில் இரண்டாம் இடத்தைச் சொந்தமாக்கினார்.

தங்கப் பதக்கத்தை மீண்டும் கைப்பற்றுவதில் வெற்றிபெறவில்லை என்றாலும், இறுதியாக 2016 ரியோ ஒலிம்பிக்கில் அடைந்த நிலையில் அவர் திருப்தி அடைந்துள்ளார்.

இந்த இறுதி போட்டியில், 17.61 மீட்டரில் உக்ரேன் தங்கம் வென்ற வேளையில், சியாட் 17.18 மீட்டரில் பின்தங்கி வெள்ளியை வென்றார்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)