BREAKING NEWS   Paris route represents Malaysia Airlines’ 68th destination and will be served by A350-900 aircraft - Capt Izham | 
 விளையாட்டு

விருதுக்கு பரிந்துரைக்கப்படாத ரொனால்டோ & மெஸ்சி

05/09/2024 06:48 PM

பாரிஸ், 05 செப்டம்பர் (பெர்னாமா) --  2003-ஆம் ஆண்டு தொடங்கி பாலன்டொர் (Ballon d'Or) விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் லியோனல் மெஸ்சி (CRISTIANO RONALDO & LIONEL MESSI) முதல் முறையாக இவ்வாண்டு பரிந்துரைக்கப்படவில்லை.

இன்று அறிவிக்கப்பட்ட Ballon d'Or விருதுக்கான பரிந்துரை பட்டியலில் அவ்விரு விளையாட்டாளர்களின் பெயர்கள் இடம் பெறவில்லை.

போர்த்துகலை சேர்ந்த ரொனால்டோ, ஐந்து முறை Ballon d'Or விருதை வென்றுள்ள வேளையில், அர்ஜெண்டினாவின் மெஸ்சி எட்டு முறை அவ்விருதை வென்று சாதனை படைத்துள்ளார்.

அவ்விரு நட்சத்திர ஆட்டக்காரர்களைத் தவிர்த்து, தற்போது உலக காற்பந்து அரங்கில் சிறப்பான விளையாட்டை வெளிபடுத்தி வரும் விளையாட்டாளர்களான Kylian Mbappe, Vinicius Junior, Jude Bellingham, Harry kane மற்றும் Bukayo Saka ஆகியோரின் பெயர்கள் Ballon d'Or விருதுக்கு இம்முறை பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மகளிர் பிரிவில், Barcelona-வின் Aitana Bonmati மற்றும் இரு முறை Ballon d'Or விருதை வென்றுள்ள Alexia Putellas ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

சிறந்த விளையாட்டாளருக்கு வழங்கப்படும் Ballon d'Or விருது விழா, வரும் அக்டோபர் 28-ஆம் தேதி பிரான்ஸ் பாரிசில் நடைபெறவுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)