பொது

பிலிப்பைன்ஸ்: சட்டவிரோதமாக நுழைந்ததாகச் சந்தேகிக்கப்படும் மலேசியர்கள் மணிலா அழைத்துச் செல்லப்படுவர்

05/09/2024 07:38 PM

கோத்தா கினாபாலு, 05 செப்டம்பர் (பெர்னாமா) -- கடந்த ஞாயிற்றுக்கிழமை பிலிப்பைன்ஸ் கடற்பகுதிக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாகச் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மூன்று மலேசியர்கள் உட்பட 11 பேர் நாளை பிலிப்பைன்ஸ், மணிலாவிற்கு விமானம் மூலம் அழைத்துச் செல்லப்படுவர்.

பிலிப்பைன்ஸ் அமலாக்கத் தரப்பினர் அவர்கள் அனைவரையும் மீண்டும் தங்கள் நாடுகளுக்கு அனுப்புவதற்கு முன்னர் ஆவண செயல்முறைக்காக மணிலாவிற்கு அனுப்புவதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.  

இன்று, சபாவில் நடைபெற்ற 2024-ஆம் ஆண்டு ஆள்கடத்தல் மற்றும் கட்டாயத் தொழிலாளி குற்றத் தடுப்பு மாநாட்டில் கலந்து கொண்டப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.  

சம்பந்தப்பட்ட அப்படகை பிலிப்பைன்ஸ் அரசாங்கம் தடுத்து வைத்துள்ளதோடு அதன் உரிமையாளர் குறித்து விரைவில் தெரிவிக்கும் என்று சைஃபுடின் மேலும் குறிப்பிட்டார்.

பிலிப்பைன்சின் கடற்பகுதிக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாக, மலேசியர்கள் எழுவர் மற்றும் சீன பிரஜைகள் எண்மர் அடங்கிய 15 பேரை சந்தேகத்தின் பேரில் அந்நாட்டு அமலாக்கத் தரப்பினர் செப்டம்பர் முதலாம் தேதி கைது செய்தனர். 

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]