விளையாட்டு

அமெரிக்க பொது டென்னிஸ்: இறுதி ஆட்டத்தில் சின்னர் - ஃபிரிட்ஸ் மோதல்

07/09/2024 08:30 PM

நியூயார்க், 07 செப்டம்பர் (பெர்னாமா) -- அமெரிக்க பொது டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்திற்கு, முதல் இத்தாலிய விளையாட்டாளராக ஜென்னிக் சின்னர், தகுதி பெற்றுள்ளார்.

வரும் 9-ஆம் தேதி நடைபெறும் இறுதி ஆட்டத்தில், அவர், உபசரணை நாட்டின் டேலர் ஃப்ரிட்ஸ் உடன் மோதுகின்றார்.

ஆஸ்திரேலிய பொது பூப்பந்து பட்டத்தை கைப்பற்றி இருக்கும் 23 வயதுடைய ஜென்னிக் சின்னர், அரையிறுதி ஆட்டத்தில் பிரிட்டனின்rஉடன் விளையாடினார்.

அதில், 7-5, 7-6 மற்றும் 6-2 எனும் நிலையில் வெற்றி பெற்று சின்னர் இறுதி ஆட்டத்தில் கால் வைத்தார்.


இதனிடையே, இறுதி ஆட்டத்திற்கு முன்னேறி இருக்கும் ஃபிரிட்ஸ், முதந்தைய அரையிறுதி ஆட்டத்தில் சக நாட்டவரான பிரான்செஸ் தியாஃபோவை தோற்கடித்தார்.

உலக தர வரிசையில் 12-வது இடத்தில் இருக்கும் அவர் 4-6, 7-5, 4-6, 6-4 மற்றும் 6-1 எனும் நிலையில் வீழ்த்தினார்.

2009-ஆம் ஆண்டுக்குப் பின்னர் கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டிக்கு வந்த முதல் அமெரிக்க விளையாட்டாளரான டேலர் ஃப்ரிட்ஸ்சின்னருக்கு எதிராக, கடும் போட்டியைக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)