பொது

டி.என்.எஸ்: கருத்துகளையும் பரிந்துரைகளையும் பெற எம்.சி.எம்.சி கலந்துரையாட வேண்டும்

08/09/2024 06:17 PM

கோலாலம்பூர், 08 செப்டம்பர் (பெர்னாமா) --  மலேசியாவில் உள்ள அனைத்து இணைய சேவை வழங்குநர்களுக்கு விதிக்கப்பட்ட செயல்களம் பெயரிடும் முறை திசைதிருப்பலைக் கட்டாயமாக்கும் உத்தரவைத் தொடர வேண்டாம் என மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

பாதுகாப்பான இணைய சேவையை உறுதிப்படுத்தும் நோக்கில் கருத்துகளையும் பரிந்துரைகளையும் பெற அனைத்து பங்குதாரர்களுடன் மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் தொடர்ச்சியான கலந்துரையாடல்களைத் தொடர வேண்டும் என்று தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் அறிவுறுத்தினார்.

சூதாட்ட இணையதளங்கள், விபச்சாரம், ஆபாசம் உட்பட இணைய குற்றச்செயல்கள் மிகவும் கவலையளிப்பதாகவும் அதற்கு விரிவான தீர்வு தேவைப்படுவதாகவும் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.

மலேசியர்கள், குறிப்பாக குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் பயன்படுத்தும் இணைய பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் இந்த விவகாரத்தில் அரசாங்கம் சமரசம் செய்து கொள்ளாது என்று அவர் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)