பொது

சுங்கைத்துறையின் அதிரடி சோதனையில் 15 லட்சம் ரிங்கிட் மதிப்புடைய பொருட்கள் பறிமுதல்

09/09/2024 07:04 PM

பகாங், 09 செப்டம்பர் (பெர்னாமா) --  மலாக்கா TENGAH அருகிலுள்ள தஞ்சோங் மிஞ்ஞாக் பெர்டானா  தொழில்துறைப் பகுதியின் வணிக வளாகத்தில், பகாங் மாநில அரச மலேசிய சுங்கைத்துறை மேற்கொண்ட அதிரடி சோதனை நடவடிக்கையில் பல்வேறு முத்திரைகளிலான மற்றும் வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள், லோரி உள்ளிட்ட 15 லட்சம் ரிங்கிட் மதிப்புடைய பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

உளவு நடவடிக்கையின் வழி கிடைத்த தகவலின் அடிப்படையில், கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி ஸ்டேஷன் பெந்தோங்கைச் சேர்ந்த JKDM அமலாக்கத் தரப்பினர் அச்சோதனையை மேற்கொண்டதாக, பகாங் மாநில சுங்கத்துறை இயக்குநர் முஹமட் அஸ்ரி செமான் தெரிவித்தார்.

வரி உட்பட மூன்று டன் லாரி மற்றும் சிகரெட்டுகளை உள்ளடக்கிய பறிமுதல் செய்யப்பட்ட மொத்த பொருட்களின் மதிப்பு 15 லட்சத்து 19,104 ரிங்கிட் ஆகும்.

சம்பந்தப்பட்ட சிகரெட் பல்வேறு வெளிநாடுகளில் இருந்து கடத்தி கொண்டு வரப்பட்டது.

இச்சம்பவம் குறித்து, 1967ஆம் ஆண்டு சுங்கத்துறை சட்டம், செக்‌ஷன் 135(1) (d)-இன் கீழ் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)