பொது

நாட்டுப் பற்றை வலுப்படுத்தும் 2024 மலேசிய தினக் கொண்டாட்டம்

10/09/2024 06:21 PM

கோலாலம்பூர், 10 செப்டம்பர் (பெர்னாமா) -- செப்டம்பர் 16-ஆம் தேதி சபா, கோத்தா கினபாலு, பாடாங் மெர்டேக்காவில் நடைபெறவுள்ள 2024 மலேசிய தினக் கொண்டாட்டம் பார்வையாளர்களிடையே நாட்டுப் பற்று உணர்வைத் தூண்டும் பல்வேறு அங்கங்களை கொண்டிருக்கும்.

அதில், ‘HEART OF SABAH’ எனும் வரவேற்பு நடனம் மக்கள் கவனத்தை ஈர்க்கும் என்று தொடர்பு அமைச்சின் துணை தலைமை செயலாளர் மனோ வீரபத்ரன் தெரிவித்தார்.

''பாடாங் மெர்டேகாவில் இறுதிகட்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் சபா மாநில அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் நியமிக்கப்பட்ட செயற்குழு தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. மேலும் பொதுமக்களுக்கு அறிவிக்க அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக மேடை தயாரிப்பு, பொது வசதிகள், பாதுகாப்பு மற்றும் நடவடிக்கைகள்,'' என்றார் அவர்.

செவ்வாய்க்கிழமை பெர்னாமா தொலைகாட்சியில் ஒளியேறிய 'Apa Khabar Malaysia' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, மனோ அந்த தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

கொண்டாட்டத்தை மேலும் சிறப்பிக்க, 'Malaysia MADANI: Jiwa Merdeka' எனும் கருப்பொருளுடன், பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)