பொது

வலைத்தள எழுத்தாளர் ராஜா பெத்ரா காலமானார்

10/09/2024 06:25 PM

கோலாலம்பூர், 10 செப்டம்பர் (பெர்னாமா) -- பிரபல வலைத்தள எழுத்தாளர் ராஜா பெட்ரா கமாருடின் நேற்று இரவு இங்கிலாந்தில் காலமானார். அவருக்கு வயது 74.

ராஜா பெட்ரா காலமான தகவலை, அவரது சகோதாரர் ராஜா இட்ரிஸ், சமூக ஊடகத்தின் வாயிலாக இன்று காலை உறுதி செய்தார்.

இங்கிலாந்து, மென்செஸ்டரில் நேற்று அந்நாட்டு நேரப்படி இரவு மணி 11.26-க்கு ராஜா பெட்ரா கமாருடின் காலமானதாக ராஜா இட்ரிஸ் அறிவித்தார்.

1950ஆம் ஆண்டு இங்கிலாந்தில் பிறந்தவரான ராஜா பெட்ரா, மலேசியா டுடே என்ற அகப்பக்கத்தின் வழியாக, மலேசிய அரசியல் குறித்த கருத்துகளையும் விமர்சனங்களையும் எழுதி பிரபலமானவர்.

அவரின் மறைவுக்கு, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது இரங்கலைத் தெரிவித்துக்கொண்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)