விளையாட்டு

உலகத் தர வரிசையில் மூன்றாம் இடத்திற்கு முன்னேறிய லீ சி ஜியா

10/09/2024 07:15 PM

கோலாலம்பூர், 10 செப்டம்பர் (பெர்னாமா) --  பூப்பந்து போட்டியின் உலகத் தர வரிசையில், மூன்றாம் இடத்திற்கு முன்னேறி இருக்கின்றார் நாட்டின் தேசிய ஆடவர் ஒற்றையர் விளையாட்டாளர் லீ சி ஜியா. 

இதற்கு முன்னர், அவர் உலகின் நான்காவது விளையாட்டாளராக இருந்த அவர்  ஓர் இடம் முன்னேறி இருப்பதாக, உலகப் பூப்பந்து சம்மேளனம் இன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த மாதம் ஜப்பான் பொது பூப்பந்து போட்டியில், ஆரம்ப சுற்றில் வெளியேறிய  போதிலும், 26 வயதான லீ சி ஜியா, 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் உட்பட நேர்மறையான அடைவுநிலயைப் பதிவு செய்துள்ளார்.

தாய்லாந்து மற்றும் டென்மார்க்கின் விளையாட்டாளர்களை பின்னுக்குத் தள்ளி 83,716 புள்ளிகளோடு சி ஜியா பட்டியலில் முன்னேற்றம் அடைந்துள்ளார். 

கெடாவை சேர்ந்தவரான அவர், கடைசியாக 2022-ஆம் ஆண்டில், உலக தரவரிசையில் மூன்றாம் இடம் பிடித்திருந்த அவர், இன்று மீண்டும் அந்த இடத்தை அடைந்துள்ளார்.  

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)