பொது

மஸ்ஜிட் இந்தியா பகுதியும் கட்டிடங்களும் பாதுகாப்பானவை - டி.பி.கே.எல்

11/09/2024 06:24 PM

கோலாலம்பூர், 11 செப்டம்பர் (பெர்னாமா) -- கோலாலம்பூர், ஜாலான் மஸ்ஜிட் இந்தியா பகுதியும் கட்டிடங்களும், மக்கள் வந்து செல்வதற்கு பாதுகாப்பானது.

கடந்த மாதம் ஆகஸ்ட் 23-ஆம் தேதி, அப்பகுதியில் ஏற்பட்ட நில அமிழ்வு ஒரே இடத்தில் மட்டுமே நிகழ்ந்த சம்பவம் என்று கோலாலம்பூர் மாநகராண்மைக் கழகம், DBKL வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

நேற்று, நில அமிழ்வு சம்பவம் தொடர்பான பணிக்குழு கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் அவ்விவகாரம் குறிப்பிடப்பட்டிருந்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கோலாலம்பூர் மாநகராண்மைக் கழகத்தின் நிர்வாக இயக்குனர் முஹ்மட் ஹமிம் தலைமையில் நடைபெற்ற அக்கூட்டத்தில் பொதுப்பணித் துறை, கனிமம் மற்றும் புவி அறிவியல் துறை, அரச மலேசிய போலீஸ் படை, மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, Indah Water Konsortium, மலேசிய ஆய்வு மற்றும் வரைபடத் துறை, மலேசிய பொறியாளர் கழகம் மற்றும் மலேசிய புவியியல் தொழில்நுட்ப அமைப்பு ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

அனைத்து நிறுவனங்களும் அவர்கள் மேற்கொண்ட தனிப்பட்ட ஆய்வுகளின் முடிவை அறிவித்ததோடு, நில அமிழ்வு, ஒரே இடத்தில் மட்டுமே நிகழ்ந்த சம்பவம் என்றும் தெரிவித்தனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)