பொது

போலி ஆவணங்களை பயன்படுத்திய குற்றத்தை ஒப்புக் கொண்டார் பள்ளி தலைமையாசிரியர்

11/09/2024 06:10 PM

ஈப்போ, 11 செப்டம்பர் (பெர்னாமா) -- மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாக, இலக்கவியல் பியானோ இசைக்கருவியை வாங்குவதற்கு போலி ஆவணங்களை பயன்படுத்திய குற்றத்தை
தெலுக் இந்தானில் உள்ள பள்ளி ஒன்றின் தலைமையாசிரியர் ஒப்புக் கொண்டுள்ளார்.

ஈப்போ செஷன் நீதிமன்றம் இன்று அவருக்கு பத்தாயிரம் ரிங்கிட் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.

57 வயதான ரொஸ்னா மாட் சைன் அபராதத்தை செலுத்தத் தவறினால் ஒரு மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி டத்தோ இப்ராஹிம் ஒஸ்மான் உத்தரவிட்டார்.

ஒரு பொது சேவை ஊழியராக இருப்பவர்கள் எந்தவொரு முடிவையும் எடுப்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

2021-ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி பத்தாயிரத்து இருபது ரிங்கிட் மதிப்புடைய ரொனால்ட் முத்திரையிலான இலக்கவியல் பியானோ மற்றும் நாற்காலியை வாங்கியதற்கான பிரிக்வேர்க் ரிசோர்சின் போலி ஆவணத்தை பயன்படுத்தியதாக ரொஸ்னா மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

2021-ஆம் ஆண்டு டிசம்பர் 9-ஆம் தேதி அவர் இக்குற்றத்தை புரிந்திருக்கின்றார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)