பொது

சட்டவிரோதமாக செயல்பட்ட அழகு நிலையம்; மூவர் கைது

11/09/2024 07:44 PM

கோலாலம்பூர், 11 செப்டம்பர் (பெர்னாமா) --  2022-ஆம் ஆண்டு தொடங்கி, கோலாலம்பூர், ஜாலான் செந்தூலில் உள்ள வணிகத்தளம் ஒன்றில் அழகு நிலையமாகவும் பல்மருத்துவ சிகிச்சையகமாகவும், சட்டவிரோதமாக செயல்பட்டு வந்தது, நேற்று கண்டறியப்பட்டது.

நேற்று பிற்பகல் சுமார் 1.20 மணியளவில், பொது மக்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற தகவலைத் தொடர்ந்து
கூட்டரசு பிரதேசம், புத்ராஜெயா மருத்துவ இலாகாவின் பல் சிகிச்சை பிரிவு, தனியார் மருத்துவ கட்டுப்பாட்டு பிரிவு ஆகியவற்றின் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட அப்பகுதியை வந்தடைந்தனர்.

அந்த அழகு நிலையத்தில், பல் மருத்துவ சிகிச்சைக்காக ஒரு பிரத்தியேக அறை கண்டறியப்பட்ட நிலையில்,  பெண் ஒருவர் உட்பட 22 முதல் 31 வயதுக்குட்பட்ட மூவர் கைது செய்யப்பட்டனர். 

இதனிடையே, இந்த அழகு நிலையம் மலேசிய சுகாதார் அமைச்சில் பதிவு செய்யப்படவில்லை என்று, புத்ராஜெயா சுகாதாரம், பல் மருத்துவ அமலாக்க அதிகாரி டாக்டர் அஸ்ஃபார் அப்துல்லா உறுதிப்படுத்தினார்.

எனினும், இன்ஸ்டாகிராம் மற்றும் டிக் டாக் போன்ற சமூக ஊடகங்களில் இவர்கள் இத்தொழிலை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)