பொது

140 AI நிறுவனங்கள் மூலம்  ஜூலை  வரை 100 கோடி ரிங்கிட் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது

12/09/2024 07:52 PM

கோலாலம்பூர், 12 செப்டம்பர் (பெர்னாமா) --  MDEC எனப்படும் மலேசிய பொருளாதார இலக்கவியல் அமைப்பில் இணைந்துள்ள  140 செயற்கை நுண்ணறிவு AI நிறுவனங்கள் மூலம் இவ்வாண்டு ஜூலை மாதம் வரை  100 கோடி ரிங்கிட் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

மலேசிய AI துறையின் வளர்ச்சி மற்றும் நம்பிக்கை மிக்க எதிர்காலத்தை இந்த அடைவுநிலை காட்டுவதாக இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.

"அதன் சாதனைகள், மலேசியாவில் ஏற்கனவே AI ஆற்றும் பங்கு, பொருளாதார மற்றும் நிச்சயமாக சிறு மற்றும் நடுத்தர வர்த்தகத்தில் பெரிய செயல்திறனை அதிகரிக்க வர்த்தக நிலப்பரப்பு AI மறுவடிவமைக்கிறது," என்றார் அவர்.

இலக்கவியல் சுகாதாரம்,  இலக்கவியல் நகரம் மற்றும் இலக்கவியல்  விவசாயம் ஆகிய மூன்று முக்கிய துறைகளில் AI பயன்பாடு உள்ளதாகவும், இதில் ஈடுபட்டுள்ள உள்ளூர் நிறுவனங்கள் அனைத்தும்  MD சான்றிதழ் பெற்றவை என்றும் கோபிந்த் சிங் டியோ  தெரிவித்தார்.

தொழில்துறைகளில் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் எழக்கூடிய சிக்கல்களைக் கணிக்கவும் AI தொழில்நுட்பம் உதவும் என்பதை புரிந்து கொள்வது முக்கியமானது என்றும் அவர் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)