விளையாட்டு

ஹாங் காங்: இறுதி சுற்றுக்கு முன்னேறியது மகளிர் இரட்டையர் ஜோடி

14/09/2024 07:42 PM

கவுலூன், 14 செப்டம்பர் (பெர்னாமா) -- ஹாங் காங் பொது பூப்பந்து போட்டியின் இறுதி சுற்றுக்கு, நாட்டின் மகளிர் இரட்டையரான பெர்லி டான் - எம்.தினா ஜோடி முன்னேறியுள்ளது.

முன்னதாக, வெற்றியைத் தீர்மானிக்கும் மூன்றாவது செட் வரை கடுமையான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருந்தாலும் தென் கொரியா ஜோடியை தோற்கடித்து ரசிகர்களின் கவனத்தை அவர்கள் ஈர்த்தனர்.

இன்று காலை ஹாங் காங்கில் கவுலூன், கொலிசியமில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் தென் கொரியாவின் பெக் ஹ நா - லீ சொ ஹீ ஜோடியுடன் மோதிய பெர்லி டான் - எம்.தினா ஜோடி முதல் செட்டில் 22-20 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றனர்.

இரண்டாம் செட்டில் தங்களின் வேகத்தை தக்க வைக்கத் தவறியதால் 17-21 தென் கொரியா ஜோடி வென்றது.

மூன்றாம் செட்டில் இரு ஜோடிகளும் தீவிரமாக விளையாடிய நிலையில் 10-10 என்ற சமநிலையில் புள்ளிகளைப் பெற்றன.

இருப்பினும், ஒரு மணி நேரம் 13 மூன்று நிமிடங்களில் 21-15 என்ற புள்ளி கணக்கில் பெர்லி டான் - எம்.தினா ஜோடி வெற்றியை உறுதிப்படுத்தினர்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]