பொது

எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் வெளிப்படைத் தன்மையாக உள்ளது

16/09/2024 06:53 PM

கோத்தா கினபாலு, 16 செப்டம்பர் (பெர்னாமா) --  எதிர்கட்சிக்கான ஒதுக்கீடு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம், MoU-வை நிராகரித்த அத்தரப்பினரின் செயலினால் அதன் தொடர்பான பேச்சு வார்த்தை நிறைவு பெற்றதாக அர்த்தமாகாது.

எதிர்கட்சியினருடன் ஒத்துழைப்பை மேற்கொள்ளவோ பேச்சு வார்த்தை நடத்தவோ அரசாங்கம் எப்போதும் வெளிப்படையாக இருப்பதை தொடர்பு அமைச்சரும் ஒருமைப்பாட்டு அரசாங்க பேச்சாளருமான  ஃபஹ்மி ஃபட்சில் சுட்டிக்காட்டினார்.

அவ்விவகாரம் தொடர்பில், ஒருமைப்பாட்டு அரசாங்கத் தலைமைத்துவம் இதுவரை இன்னும் கலந்துரையாடவில்லை என்று ஃபஹ்மி குறிப்பிட்டார்.

முன்னதாக அவர், இன்று, கோத்தா கினபாலுவில், சபா அனைத்துலக மாநாட்டு மையம், SICC-இல், 2024 Tradition In Tune கலை விழாவைத் தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)