பொது

சரக்குக் கப்பல் ஒன்று மூழ்கியதில் அதன் கேப்டனைக் காணவில்லை

28/01/2025 08:07 PM

லபுவான், 28 ஜனவரி (பெர்னாமா) -- சரவாக், லாவாஸ், தஞ்சோங் பெராபட்டில் இருந்து சுமார் 1.8 கடல்மைல் தொலைவில் சரக்குக் கப்பல் ஒன்று மூழ்கியதில் அதன் கேப்டன் காணாமல் போயுள்ளார்.

இச்சம்பவத்தில் மேலும், ஆறு மலேசியர்கள் காப்பாற்றப்பட்டனர்.

சம்பந்தப்பட்ட கப்பல், கவிழ்ந்து கிடந்ததை இன்று காலை 6.30 மணிக்கு லபுவானின் மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனம், APMM-மின் ரோந்து படகு கண்டறிந்ததாக அதன் இயக்குநர் கேப்டன் இஸ்வான்ஹாடி இட்ரோஸ் தெரிவித்தார்

நேற்றிரவு அந்தக் கப்பலுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது குறித்து தகவல் கிடைத்ததும் கூச்சிங்கின் தேடல் மற்றும் மீட்பு குழு, தேடல் பணிகளைத் தொடங்கியதாக அவர் கூறினார்.

இச்சம்பவத்தில், 30-இல் இருந்து 45 வயதுடைய கப்பல் பணியாளர்கள் அறுவர் பாதுகாப்பு படகில் ஏறி உயிர் தப்பினர்.

அவர்களில் இருவருக்கு சொற்ப காயங்கள் மட்டுமே ஏற்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)