உலகம்

மோசமான வெள்ளத்தினால் போலந்தில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது

17/09/2024 02:38 PM

போலந்து, 19 செப்டம்பர் (பெர்னாமா) -- போலந்தில் ஏற்பட்டுள்ள மோசமான வெள்ளத்தை தொடர்ந்து அந்நாட்டில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களாக அந்நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் வெள்ளத்தினால் குறைந்தது ஐவர் உயிரிழந்திருக்கின்றனர்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலந்து பிரதமர் டோனல்ட் டஸ்க் தெரிவித்திருக்கிறார்.

மேலும், இந்த இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி வழங்கப்படும் என்று அவர் அறிவித்திருக்கிறார்.

இந்த உதவி நிதி திட்டத்திற்கு, அந்நாட்டின் நிதி அமைச்சு இரண்டு லட்சத்து 58,000 அமெரிக்க டாலரை ஒதுக்கியுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகள் மற்றும் அலுவலகங்கள் நேற்று மூடப்பட்டன.

மேலும், குடிநீர் மற்றும் உணவுகள் லாரிகள் மூலம் விநியோகிக்கப்பட்டன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)