பொது

வெள்ளத்தை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்

24/10/2024 05:13 PM

கோலாலம்பூர், 24 அக்டோபர் (பெர்னாமா) -- வெள்ளம் குறிப்பாக திடீர் வெள்ளத்தை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என்று கூட்டரசு பிரதேசத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் டாக்டர் சலிஹா முஸ்தாபா தெரிவித்தார்.

கடந்த அக்டோபர் 11ஆம் தேதி லாவோசிடமிருந்து ஆசியான் தலைமைத்துவத்தைப் பெற்றப் பின்னர், 

நாட்டின் முதன்மை நுழைவாயிலாக மட்டுமின்றி தலைநகராகவும் வட்டார பொருளாதார மையமாகவும் கோலாலம்பூர் விளங்குவதால் இந்நடவடிக்கைகள் அவசியம் என்று அவர் கூறுகிறார்.

2025 ஆசியான் தலைமைத்துவம் மற்றும் 2026 மலேசியாவுக்கு வருகை புரியும் ஆண்டு ஆகியவற்றின்போது கோலாலம்பூர் மாநாகரின் அழகிற்கும் நல்வாழ்விற்கும் கோலாலம்பூர் மாநகராண்மை கழகம், டிபிகேஎல் பொறுப்பேற்கும் என்று டாக்டர் சலிஹா குறிப்பிட்டார்.

''இந்த தயார்நிலை பணிகள் ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கையாக இருக்க வேண்டும்?
PBT தரப்பாக டிபிகேஎல் மட்டுமின்றி, மெட் மலேசியா, ஜேபிஎஸ், ஜேகேஎம், அமலாக்க நிறுவனங்களான பி.டி.ஆர்.எம், ஏ.பி.எம், தீயணைப்புப் படை, SWCorp, அலாம் ஃபுளோரா ஆகியவற்றையும் உள்ளடக்கி இருக்க வேண்டும்,'' என்றார் அவர்.  

மக்களவையில், அமைச்சர்களின் கேள்வி பதில் நேரத்தின்போது, பத்து பஹாட் நாடாளுமன்ற உறுப்பினர் ஓன் அபு பாக்கார் எழுப்பியக் கேள்விக்கு அவர் அவ்வாறு பதிலளித்தார்.

திடீர் வெள்ளச் சம்பவங்களை எதிர்கொள்ளும் வகையில் திறந்த வெளியில் உள்ள 15 நீர்த்தேக்கக் குளங்களையும்,  நிலத்தடியில் ஒன்பது மூடிய குளங்களையும் டிபிகேஎல் பராமரித்து வருவதாக டாக்டர் சலிஹா கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)