விளையாட்டு

செங்குடு பொது டென்னிஸ் பட்டத்தை கைப்பற்றினார் ஷாங் ஜன்செங்

25/09/2024 07:42 PM

செங்குடு, 25 செப்டம்பர் (பெர்னாமா) -- ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இத்தாலியின் ல்ரென்ஸோ மொசேட்டியை தோற்கடித்து, செங்குடு பொது டென்னிஸ் பட்டத்தை கைப்பற்றிய இரண்டாவது சீன விளையாட்டாளராக ஷாங் ஜுன்சேங் உருவெடுத்துள்ளார். 

தற்போது சீனாவின் பட்டியலில், இரண்டாம் இடத்தில் இருக்கும் அவர் உலக தரவரிசையில் 55-வது இடத்தில் உள்ளார். 

19 வயதுடைய அவருக்கு இது முதல் எடிபி பட்டமாகும்.

இறுதி ஆட்டத்தில், முசேட்டி உடன் களம் கண்ட ஷாங்    7-6, 6-1 என்று நேரடி செட்களில் வெற்றியை பதிவு செய்தார். 

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)