விளையாட்டு

ஆசிய கிளப் வெற்றியாளர் கிண்ணம்; திரெங்கானு சமநிலை

26/09/2024 06:18 PM

கோலா திரெங்கானு, 26 செப்டம்பர் (பெர்னாமா) -- 2024/2025 ஆசிய கிளப் வெற்றியாளர் கிண்ண காற்பந்து போட்டி...

நேற்றிரவு சொந்த அரங்கில் விளையாடிய திரெங்கானு எஃசி வெற்றி பெறும் வாய்ப்பை நழுவ விட்டு, 2-2 என்று வியட்நாமின் Dong A Thanh Hoa அணியுடன் சமநிலை கண்டது. 

திரெங்கானு அரங்கில் களமிறங்கிய திரெங்கானு எஃசிமுதல் பாதியின் 15 நிமிடங்கள் வரை கோல் போடுவதில் சிரமத்தை எதிர்நோக்கியது. 

பின்னர், 20-வது நிமிடங்களுக்குப் பின்னர் முஹமட் ரஷிட்  வழி திரெங்கானு எஃசி அதன் முதல் கோலை அடித்தது. 

முதல் பாதி ஆட்டம் நிறைவடைவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்னர், திரெங்கானு எஃசி அதன் இரண்டாவது கோலைப் போட்டு 2-0 என்ற நிலையில் முன்னிலை வகித்தது.

எனினும், இரண்டாம் பாதியில் திரெங்கானுவின் மகிழ்ச்சி நீடிக்காமல் போனது. 

வியட்நாமின் Dong A Thanh Hoa கிளப் இரு கோல்களை அடித்து ஆட்டத்தை மலேசியாவுக்கு எதிராக சமமாக்கியது. 


-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)