விளையாட்டு

காற்பந்து போட்டிகளில் இருந்து விடைபெறுகிறார் வரான்

26/09/2024 06:59 PM

பாரிஸ், 26 செப்டம்பர் (பெர்னாமா) --  மென்செஸ்டர் யுனைடெட் மற்றும் ரியல் மெட்ரிட் அணியின் முன்னாள் தற்காப்பு ஆட்டக்காரர் ரஃபேல் வரான்  காற்பந்து விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

2018 உலகக் கிண்ணத்தை வென்ற அவர் தனது முடிவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதன்கிழமை தெரிவித்தார்.

கோமோ கிளப்பில்  தொடர்ந்து இருப்பேன் என்றும் காற்பந்து போட்டிகளுக்கு வெளியே ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்க விரும்புவதாகவும்  ரஃபேல் கூறினார்.

அவர் பிரதிநிதித்துவப்படுத்திய கிளப்களின் ஆதரவாளர்கள், அணியினர், பயிற்சியாளர்கள் மற்றும் காற்பந்தில் வாழ்க்கை முழுவதும் அவருக்கு எப்போதும் ஆதரவளித்த அனைத்து ஊழியர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

31 வயதான வரேன் கடந்த பருவத்தின் இறுதியில் யுனைடெட்டை விட்டு வெளியேறிய பிறகு ஈராண்டு ஒப்பந்தத்தில், இத்தாலியின் சிரி ஆ கோமோ கிளப்பில் சேர்ந்தார், 

மொத்தத்தில், வரான்  தமது 14 ஆண்டுகால காற்பந்து வாழ்க்கையில் 480 கிளப் போட்டிகளில் பங்கேற்றார். 

அதில் அவர் ரியல் மெட்ரிட் அணியுடன் நான்கு முறை சாம்பியன்ஸ் லீக்கை வென்றார்.  


-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)