உலகம்

மியன்மார் பொதுத் தேர்தலில் கிளர்ச்சிப் படைகள் போட்டியிட இராணுவம் அழைப்பு 

27/09/2024 04:13 PM

மியன்மார், 27 செப்டம்பர் (பெர்னாமா) -- மியன்மாரில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் அந்நாட்டில் செயல்பட்டு வரும் கிளர்ச்சிப் படைகள் போட்டியிட முன்வர வேண்டும் என்று இராணுவம் அழைப்பு விடுத்துள்ளது.

மேலும் அந்த கிளர்ச்சிப் படைகள் எதிர்கட்சிகளுடன் கூட்டணி அமைத்து பொதுத் தேர்தலில் போட்டியிடலாம் என்றும் இராணுவம் அறிவுறுத்தியிருக்கிறது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்த்து மியன்மார் இராணுவம் ஆட்சியை கைப்பற்றியது.

ஆட்சியை கைப்பற்றிய இராணுவம், அப்போதைய அரசாங்க ஆலோசகர் ஆங் சான் சூச்சியையும் கைது செய்தது.

அதனை தொடர்ந்து இராணுவ ஆட்சியை எதிர்க்க அந்நாட்டில் அதிகமான  கிளர்ச்சி படைகள் உருவாகின.

கிளர்ச்சி படைகளுக்கும் இராணுவத்திற்கும் தற்போது உள்நாட்டு சண்டை நிகழ்ந்து வரும் வேளையில், இதனை முடிவுக்கு கொண்டு வர இராணுவம் இந்த ஆலோசனையை முன்வைத்துள்ளது.

நாட்டிற்கு அமைதி மற்றும் வளர்ச்சியை வழங்க கிளர்ச்சியாளர்களும் எதிர்க்கட்சிகளும் வன்முறையைக் கைவிட வேண்டும் என்றும் அடுத்த பொதுத் தேர்தலில் பங்கேற்க அரசியல் கட்சி ஒன்றை நிறுவ வேண்டும் என்றும் இராணுவம் ஓர் அறிக்கையின் வழி பரிந்துரை செய்துள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)