விளையாட்டு

சீன பொது டென்னிஸ்; அரையிறுதிக்கு தேர்வாகினார் காஃப்

04/10/2024 06:35 PM

பெய்ஜிங், 04 அக்டோபர் (பெர்னாமா) -- சீன பொது டென்னிஸ் போட்டியின் அரையிறுதிக்கு அமெரிக்காவின் கோகோ காஃப் தேர்வாகினார்.

நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் உக்ரேனின் யூலியா ஸ்டாரோடுப்ட்சேவா-வுடன் (Yuliia Starodubtseva) காஃப் விளையாடினார்.

இதில், முதல் சுற்றில் 2-6 என்று தோல்வி கண்டாலும், அடுத்த இரண்டு சுற்றுகளை 6-2 6-2 என்ற புள்ளிகளில் கோகோ காஃப் வெற்றி பெற்றார்.

இந்த வெற்றியின் வழி, அமெரிக்க பொது டென்னிஸ் போட்டியில் முன்னாள் வெற்றியாளரான கோகோ காஃப் இரண்டாம் முறையாக சீன பொது டென்னிஸ் போட்டியின் அரையிறுதிக்குத் தேர்வாகியுள்ளார்.

அரையிறுதி ஆட்டத்தில் கோகோ காஃப், ஸ்பெயினின் பாவ்லா படோசாவுடன் விளையாடவுள்ளார்.

இதனிடையே மற்றொரு காலிறுதி ஆட்டத்தில்,  பாவ்லா படோசா சீனாவின் ஷுஹாய் சாங்குடன் (Shuai Zhang) விளையாடினார்.

இவ்வாட்டத்தில் 6-1, 7-6 என்ற புள்ளிகளில் வெற்றி பெற்று படோசா அரையிறுதிக்கு முன்னேறினார்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]