விளையாட்டு

ஜெர்மனி பண்டேஸ்லீகா; யூனியன் பெர்லின் வெற்றி

06/10/2024 04:36 PM

பெர்லின், 06 அக்டோபர் (பெர்னாமா) -- ஜெர்மனி படேஸ்லீகா கிண்ணம்... 

நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில்,யூன்யன் பெர்லின் 2-1 என்ற கோல்களில் பொரூசியா டோர்ட்மண்ட் கிளப்பைத் தோற்கடித்தது. 

சொந்த அரங்கில் விளையாடிய ,யூன்யன் பெர்லின், ஆறு ஆட்டங்களுக்குப் பிறகு பண்டேஸ்லீகா பட்டியலில் ஆறாம் இடத்தில் உள்ளது. 

முதல் பாதியின் 20 நிமிடங்கள் வரை, இரு அணிகளுமே கோல் போடுவதில் சிரமத்தை எதிர்நோக்கின. 

பொரூசியா டோர்ட்மண்ட்  ஆட்டக்காரர் செய்த தவற்றால், ஆட்டத்தின் 26-வது நிமிடத்தில், யூனியன் பெர்லினுக்கு பினால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. 

அதன் மத்திய திடல் ஆட்டக்காரர் பினால்டியை லாவகமாக கோலாக்கி 
1-0 என்ற நிலையில் தமது அணியை முன்னிலையில் வைத்தார்.  

அதே உத்வேகத்துடன் விளையாடிய யூனியன் பெர்லின் அதன் மற்றுமொரு கோலை 45-வது நிமிடத்தில் போட்டு முதல் பாதியை 2-0 என்று முடித்தது. 

பொரூசியாவின் ஒரே கோல் இரண்டாம் பாதியில் அடிக்கப்பட்டது. 

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)