விளையாட்டு

ஷங்காய் டென்னிஸ் போட்டியின் நான்காவது சுற்றில் ஜோகோவிச்

09/10/2024 06:44 PM

ஷங்காய், 09 அக்டோபர் (பெர்னாமா) -- ஷங்காய் பொது டென்னிஸ் போட்டியின் நான்காவது சுற்றுக்கு முன்னேறினார். செர்பியாவின்  நோவக் ஜோகோவிச். 

அவர் இத்தாலியின் ஃபிளேவியோ கோபோலியை நேரடி செட்களில் வீழ்த்தினார். 

முதல் செட்டை 6-1 என்று மிக எளிதில் கைப்பற்றிய  நோவக் ஜோகோவிச் இரண்டாம் செட்டிலும் அதே உத்வேகத்துடன் அவர் விளையாடினார். 

1 மணி நேரம் 3 நிமிடங்கள் நடந்த போட்டியில், 6-2 என இரண்டாம் செட்டையும் அவர் கைப்பற்றினார். 

24 முறை கிராண்ட்ஸ்லாம் வெற்றியாளரான ஜோகோவிச்,  அடுத்த சுற்றில் ரஷ்யாவைச் சேர்ந்த ரோமன் சஃபியுலினை எதிர்கொள்கிறார். 

அவர் முன்னதாக  5-7, 7-5, 7-6  என்ற நிலையில் அதில் வெற்றிப் பெற்றிருந்தார். 

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)