உலகம்

இந்தியத் தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார் 

10/10/2024 02:03 PM

மும்பை, 10 அக்டோபர் (பெர்னாமா) -- உடல்நலக்குறைவால் மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல இந்தியத் தொழிலதிபர் ரத்தன் டாடா நேற்றிரவு காலமானார்.

அவருக்கு வயது 86.

டாடாகுழுமத்தின் தலைவராக 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வந்த ரத்தன் டாடா, தீவிர சிகிச்சையில் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தாக கூறப்படுகிறது.

ரத்தன் டாடாவின் அளவிட முடியாத பங்களிப்புகள் டாடா குழுமத்தை மட்டுமில்லாமல், இந்திய கட்டமைப்பையும் வடிவமைத்துள்ளதாக அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 1991 ஆண்டு டாடா குழுமத்தின் தலைவராக பொறுப்பேற்ற ரத்தன் டாடா, 2012-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஓய்வு பெற்றார்.

அவரது பதவிக்காலத்தில் டாடா குழுமத்தின் வருவாய் பன்மடங்கு அதிகரித்தது. 

தொழில்துறையில் அவரின் பங்களிப்புக்கு மரியாதை அளிக்கும் வகையில் இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷன் ஆகிய விருதுகள் வழங்கி  கௌரவிக்கப்பட்டது.

இதனிடையே, ரத்தன் டாடா மறைவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உட்பட பிரமுகர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)