பொது

மலேசியா ஏர்லைன்சின் யு.டி.பி அடைவுநிலை செப்டம்பர் மாதத்தில் கணிசமான முன்னேற்றம்

16/10/2024 08:09 PM

கோலாலம்பூர், 16 அக்டோபர் (பெர்னாமா) -- மலேசியா ஏர்லைன்ஸ் அனைத்துலக விமான நிலையங்களின் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை பின்பற்றும் அடைவுநிலை, யு.டி.பி கடந்த செப்டம்பர் மாதத்தில் கணிசமான முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளது.

இவ்வாண்டு ஜனவரி தொடங்கி ஆகஸ்ட் மாதம் சேகரிக்கப்பட்ட தரவுகளின்படி, 315,388 விமான பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளதோடு, 244,112 விமான பயணங்கள் செயல்படுத்தப்பட்டதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

"தற்போதைய தரவின்படி, மலேசிய ஏர்லைன்ஸ் உள்நாட்டு பயணத்திற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் பதிவான 58.2% விழுக்காட்டை காட்டிலும் செப்டம்பர் மாதத்தில், 78.1% யு.டி.பி விகிதத்துடன் முன்னேற்றம் கண்டுள்ளதைக் காட்டுகிறது. அதைத் தொடர்ந்து, தொழில்நுட்பப் பிரச்சனைகளைச் சரிசெய்ய நிறுவன தரப்பினர் சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அனைத்துலகப் பயணத்திற்கான மலேசிய ஏர்லைன்சின் யு.டி.பி விகிதமும்  அக்டோபர் மாதத்தில் பதிவான 54.7% காட்டிலும் செப்டம்பர் மாதத்தில் 72% பதிவாகியதை காட்டுகிறது," என்றார் அவர்.

இன்று, மக்களவையில் பெதோங் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ரிசர்ட் ராபு எழுப்பியக் கேள்விக்கு அந்தோணி லோக் அவ்வாறு குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)