கோலாலம்பூர், 18 அக்டோபர் (பெர்னாமா) -- டத்தோஶ்ரீ அன்வார் தலைமையிலான மாடனி அரசாங்கத்தின் மூன்றாவது வரவு செலவு திட்டத்தில், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு அரசாங்கம் அடுத்தாண்டு 36 கோடி ரிங்கிட் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, மருத்துவமனையிலுள்ள பழுதடைந்த கழிப்பறைகள், புதிய படுக்கைகள் உள்ளிட்ட சுகாதார உள்கட்டமைப்பை பராமரிக்க மொத்தம் 135 கோடி ரிங்கிட் நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
மற்றுமொரு நிலவரத்தில், மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (MCMC) 12 கோடி ரிங்கிட் நிதியுடன் பொது பல்கலைக்கழகங்கள், பள்ளிகள், இராணுவ முகாம்கள் மற்றும் மாரா நிறுவனங்களில் இணைய அணுகலை மேம்படுத்த ஒப்புக்கொண்டதாக, அவர் மேலும் கூறினார்.
மேலும், அரசாங்க நிறுவனங்களின் கீழ், கடனுதவி வசதி மற்றும் வர்த்தக கடனுதவி உத்தரவாதமாக அரசாங்கம் 4000 கோடி ரிங்கிட்டை ஒதுக்கீடு செய்துள்ளது.
அதனத் தொடர்ந்து, சர்க்கரை பானங்களுக்கான வரி ஜனவரி 1-ஆம் தேதி முதல் லிட்டருக்கு 40 சென் உயர்த்தப்படுள்ள வேளையில்..
உணவு உத்தரவாதம், எரிசக்தி பரிமாற்றம் மற்றும் இலக்கவியல் போன்ற துறைகளில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை மேம்பாட்டில் அரசாங்கம் கவனம் செலுத்துவதாக டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)