உலகம்

குடியிருப்புப் பகுதியில் இஸ்ரேல் வான் வழித் தாக்குதல்; 100 பேர் பலி

30/10/2024 07:53 PM

காசா, 30 அக்டோபர் (பெர்னாமா) --   நேற்று குடியிருப்புப் பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான் வழித் தாக்குலில் குறைந்தபட்சம் 100 பேர் கொல்லப்பட்டனர்.

காசா மற்றும் லெபனானில், இஸ்ரேல் அதன் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியதால் உயிர் பிழைத்தவர்களை மீட்பதற்கு மீட்புக் குழுக்கள் செயல்பட்டுக் கொண்டிருப்பதாக காசாவின் பொது பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாலஸ்தீன மீட்புக் குழுவும், சிக்கிக் கொண்ட குடும்ப உறுப்பினர்களும் வடக்கு காசாவில் உள்ள பீட் லாஹியாவில் அழிக்கப்பட்ட ஐந்து மாடி குடியிருப்புகளின் முற்றத்தில் ஒன்றுகூடினர்.

பீட் லாஹியாவில் உள்ள அபு நஸ்ர் குடும்பத்தின் நிகழ்ந்த படுகொலையைத் தொடர்ந்து அங்கு ஏற்பட்ட இடிபாடுகளுக்கு அடியில் குறைந்தது 40 பேர் சிக்கி இன்னும் காணவில்லை என்று காசாவின் பொது பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

தாக்குதல் குறித்த அறிக்கைகளைத் தமது தரப்பு ஆராய்ந்து வருவதாக இஸ்ரேலியா இராணுவம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் நடத்திய இப்பயங்கரவாத தாக்குதலில் அதிகளவிலான சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளது மிகவும் கொடுமையானது என்று இஸ்ரேலின் முக்கிய பங்காளியும் ஆதரவளிக்கும் நாடாகிய அமெரிக்கா விவரித்துள்ளது.

காசா மற்றும் மேற்குக் கரையில் பாலஸ்தீனர்களுடன் இணைந்து செயல்படும் ஐக்கிய நாடுகளின் முக்கிய உதவி நிறுவனமான UNRWA-ஐ தடை செய்ய இஸ்ரேல் நாடாளுமன்றம் வாக்களித்ததைத் தொடர்ந்து,
அனைத்துலக அளவில் கடும் விமர்சனத்திற்கு இஸ்ரேல் ஆளாகிய நிலையில் இத்தகைய குண்டுவெடிப்புச் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)