கோலாலம்பூர், 22 அக்டோபர் (பெர்னாமா) -- வறுமையை ஒழிப்பதற்கான அரசாங்கத்தின் அணுகுமுறை இன வேறுபாடற்றது.
உதவிகள் தேவைப்படும் அனைத்து மக்களுக்கும் பாரபட்சமின்றி ஆதரவளிக்கப்படும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதியளித்தார்.
இந்நாட்டில் பெரும்பான்மையான ஏழைகள், மலாய் மற்றும் பூமிபுத்ரா சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்றாலும், பாதிக்கப்பட்ட சீனர்கள், இந்தியர்கள் உட்பட அனைத்து இனத்தினருக்கும் தேவையான உதவிகள் கிடைக்கும் என்றும் டத்தோ ஶ்ரீ அன்வார் கூறினார்.
இன்று, மக்களவையில், அமைச்சர்களின் கேள்வி பதில் நேரத்தின்போது, பிரதமர் அவ்வாறு தெரிவித்தார்.
கடந்தாண்டு ஜனவரி 31-ஆம் தேதி வரையில், 1 லட்சத்து 26 ஆயிரத்து 372 குடும்பங்கள், வறிய நிலையில் இருப்பது அடையாளம் காணப்பட்டது, இவ்வாண்டு ஜூலை 29-ஆம் தேதிக்குள் அந்த எண்ணிக்கைக்கு தீர்வு காணப்பட்டது.
இதனிடையே, மக்களின் உண்மையான வருமானத்தை துல்லியமாக மதிப்பிடுவதற்கு, குடும்ப வருமான செயல்முறையை, அரசாங்கம் தனிநபர் வருமானமாக மாற்றியிருப்பதாக அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
"புதிய தகவல்களின் அடிப்படையில் தனிநபர் வருமானத்திற்கு அரசாங்கம் பயன்படுத்திய பழைய அணுகுமுறையிலிருந்து மாற்றம் காண்கிறது. வாழ்க்கைச் செலவின மன்றம் மற்றும் மாநில அரசுடன் இதுவரை செய்யாத கலந்துரையாடல் மற்றும் நிர்வகிப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன." இது சரியான அணுகுமுறையாக இல்லாவிடினும், முதல் ஆண்டின் புள்ளிவிவரங்களின்படி, கிட்டத்தட்ட 22,000 முடிந்துவிட்ட நிலையில், அதனை முழுமையடைச் செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன்."
இன்று மக்களவையில், ரொக்கப் பண உதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடைய தனிநபர்களின் வருமான வரம்பு மதிப்பை நிர்ணயிப்பது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, நிதி அமைச்சருமான அன்வார் அவ்வாறு பதிலளித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)