பொது

சட்டப்பூர்வ அமைப்புகளின் சீரமைப்பு செயற்குழுவை அமைக்க அரசாங்கம் இணக்கம்

22/10/2024 04:50 PM

கோலாலம்பூர், 22 அக்டோபர் (பெர்னாமா) -- சட்டப்பூர்வ அமைப்புகள் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள், GLC-யின் செயல்பாடுகள் ஒத்திருக்கும் விவகாரத்தைச் சமாளிக்க, CLBG எனப்படும் உத்திரவாத நிறுவனம் உட்பட கூட்டரசு சட்டபூர்வ அமைப்புகளின் சீரமைப்பு செயற்குழுவை அமைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

முன்னாள் கருவூல தலைமைச் செயலாளர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இச்செயற்குழுவிற்கு தலைமையேற்பார் என்று பிரதமர், டத்தோ ஶ்ரீ அன்வார் தெரிவித்தார்.

அச்செயற்குழு, இலக்கில் இருந்து விலகாமல் இருப்பதை உறுதி செய்ய முஹ்மட் காலிட் முஹ்மட் லாத்திப் தலைமையிலான மடானி கண்காணிப்பு பிரிவு, அதனை கண்காணிக்கும் என்றும் பிரதமர் கூறினார்.

இன்று, மக்களவையில், GLC, அரசு சார்ந்த முதலீட்டு நிறுவனங்கள், GLIC மற்றும் தொடர்புடைய நிறுவனங்கள் குறித்து, அரசாங்கம் திட்டமிட்டிருக்கும் நடவடிக்கைகளைத் தெரிந்துக் கொள்வதற்கு எழுப்பப்பட்ட கேள்விக்கு, அன்வார் அவ்வாறு பதிலளித்தார்.

மற்றொரு நிலவரத்தில், மலேசிய மேம்பாட்டு வங்கி, Exim வங்கி மற்றும் SME வங்கி ஆகியவற்றை இணைக்கும் பரிந்துரை, இன்னும் செயல்முறையில் உள்ளது.

சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவம் ஒருபோதும் புறக்கணிக்கப்படாது என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இன்று, மக்களவையில் அந்த மூன்று வங்கிகள் இணைப்பது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பிரதமர் அவ்வாறு பதிலளித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)