கியூபா, 22 அக்டோபர் (பெர்னாமா) -- கிழக்கு கியூபாவை ஒஸ்கார் எனப்படும் வெப்பமண்டல சூறாவளி தாக்கியதில் குறைந்தது அறுவர் உயரிழந்தனர்.
இந்நிலையில், நான்காவது நாளாக அத்தீவின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரமின்றி இருள் சூழ்ந்துள்ளது.
குவாந்தானாமோ மாகாணம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்திருக்கும் நிலையில் மீட்புப் பணியாளர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்ல சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.
இந்த இயற்கை பேரிடரினால் சுமார் 1,000 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
அதோடு, மின்சாரம் துண்டிக்கப்பட்டிருப்பதால் சுமார் ஒரு கோடி மக்கள் மின்சாரம் இன்றி நாள்களை கடத்தி வருகின்றனர்.
மின்சார விநியோகத்தில் மூன்றில் ஒரு பகுதி மட்டுமே இதுவரை சரி செய்யப்பட்டுள்ளதாக அதன் அதிபர் மிகுவல் டயஸ்-கேனல் தெரிவித்தார்.
-- பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]