விளையாட்டு

ஜோகூர் சுல்தான் கிண்ண அனைத்துலக ஹாக்கி போட்டியில் மலேசியா தோல்வி

23/10/2024 06:58 PM

ஜோகூர் பாரு, 23 அக்டோபர் (பெர்னாமா) -- 2024 ஜோகூர் சுல்தான் கிண்ண அனைத்துலக ஹாக்கி போட்டி.

நேற்று நடைபெற்ற மூன்றாவது ஆட்டத்தில் மலேசியா 2-4 என்ற கோல்களில் இந்தியாவிடம் தோல்வியடைந்தது.

ஆட்டத்தை தொடக்கத்தில் ஆக்கிரமித்த மலேசியா எட்டாவது நிமிடத்தில் அதன் முதல் கோலைப் போட்டது.

அடுத்த சில நிமிடங்களில் மலேசியாவின் இரண்டாவது கோல் போடப்பட்டது.

இரு கோல்கள் பின்னணியில் இருந்த இந்தியா, 11-வது நிமிடங்களுக்கு பின்னர் அதன் கோல் வேட்டையைத் தொடங்கியது.

முதல் பாதி ஆட்டம் வரை மூன்று கோல்கள் அடித்த இந்தியா, அதன் நான்காவது கோலை இரண்டாம் பாதியில் போட்டது.

ஜோகூர் ஹாக்கி அரங்கில் நடந்த போட்டியில் தேசிய அணி தொடர்ந்து மூன்றாவது முறையாக தோல்வி கண்டுள்ளது.

முன்னதாக மலேசியா கடந்த சனி ஞாயிற்றுக்கிழமைகளில், முதல் மற்றும் இரண்டாவது ஆட்டங்களில் முறையே, நியூசிலாந்து, ஜப்பானிடம் வீழ்ந்தது.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]