உலகம்

லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதலில் ஐந்து மருத்துவமனைகளின் சேவை முடக்கம்

24/10/2024 07:44 PM

தெஹ்ரான், 24 அக்டோபர் (பெர்னாமா) -- லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலினால் அங்குள்ள ஐந்து மருத்துவமனைகள் செயல்பட முடியாமல் போனதை லெபனான் மருத்துவர்கள் சங்கத் தலைவர், யூசுப் பகாஷ் உறுதிப்படுத்தியுள்ளார்.

இத்தாக்குதல்களினால் மேலும் 22 மருத்துவமனைகள் சேதமடைந்துள்ளதாக அவர் அல்-ஜசீரா தொலைக்காட்சியுடனான நேர்காணலில் தெரிவித்தார். 

இஸ்ரேல் அனைத்து தரப்பையும் குறிவைத்து இத்தாக்குதலை மேற்கொண்டு வரும் வேளையில், அதில் சுகாதாரத் துறையும் பாதிக்கப்பட்டுள்ளதாக பகாஷ் குறிப்பிட்டார்.

சுகாதாரத் துறையை முடக்கும் நோக்கத்தில் அதன் ஊழியர்கள் மற்றும் உள்ளகட்டமைப்பைக் குறிவைத்து இஸ்ரேல் வேண்டுமென்றே இத்தாக்குதல்களை மேற்கொள்வதாக அவர் வலியுறுத்தினார்.

தற்போது லெபனானின் சுகாதார அமைப்பு மோசமான நிலையில் உள்ளது.

இந்நிலையில், அனைத்துலக ஒப்பந்தம் மற்றும் ஜெனிவா மாநாட்டை பின்பற்றுமாறு பகாஷ் இஸ்ரேலைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)