விளையாட்டு

வியன்னா பொது டென்னிஸ்; அரையிறுதிக்கு டி மினொர் தேர்வு

26/10/2024 06:35 PM

வியன்னா, 26 அக்டோபர் (பெர்னாமா) -- ஆஸ்திரியா, வியன்னா பொது டென்னிஸ் போட்டியின் அரையிறுதி ஆட்டத்திற்கு அலெக்ஸ் டி மினொர் தேர்வாகினார்.

நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினொர், யகுப் மென்சிக்குடன் விளையாடினார்.

முதல் செட்டில், 6-7 என்ற புள்ளிகளில் தோல்வி கண்டாலும், இரண்டாம் செட்டில் 6-3 என்ற புள்ளிகளில் வென்று  டி மினொர் ஆட்டத்தைச் சமப்படுத்தினார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாம் செட்டிலும் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி 
6-4 என்ற புள்ளிகளில், செக் குடியரசின் யகுப் மென்சிக்கை, டி மினொர் தோற்கடித்தார்.

இன்று இரவு நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் டி மினொர், கரேன் கச்சனோவுடன் மோதவுள்ளார்.

மற்றொரு காலிறுதி ஆட்டத்தில், கரேன் கச்சனோவும், இத்தாலியின் மட்டெயோ பெரெட்டீனியும் விளையாடினர்.

இவ்வாட்டத்தை 6-1 6-4 என்ற புள்ளிகளில் எளிதாகக் கைப்பற்றி, கரேன் கச்சனோவ் அரையிறுதிக்கு முன்னேறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)