உலகம்

ஜப்பானிய நாடாளுமன்றத் தேர்தல்; வாக்களிப்பு முடிந்தது

27/10/2024 07:20 PM

தோக்கியோ, 27 அக்டோபர் (பெர்னாமா) -- இன்று நடைபெற்ற ஜப்பானிய நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு அந்நாட்டின் நேரப்படி இரவு 8 மணிக்கு நிறைவுபெற்றது.

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்களிப்பு சுமுகமாக நடைபெற்றதாக போலீஸ் தெரிவித்துள்ளது.

314 பெண்கள் உட்பட 1344 வேட்பாளர்கள் இம்முறை போட்டியிடுகின்ற நிலையில், தேர்தல் முடிவு இன்றே அறிவிக்கப்படக்கூடும் என்று நம்பப்படுகிறது.

150 கோடிக்கும் அதிகமானோர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ள நிலையில், புதிய அரசாங்கத்தை தேர்ந்தெடுக்க மக்கள் முனைப்பு காட்டியதாக அந்நாட்டின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நாடு முழுதும் 45,000 வாக்களிப்பு மையங்கள் அமைக்கப்பட்டன.

இன்றைய தேர்தலில் பிரதமர் ஷிகெரு இஷிபாவின் மிதவாத ஜனநாயகக் கட்சி வெற்றியை நழுவவிடலாம் என்று கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.

பெரும்பான்மையை இழக்கும் பட்சத்தில், அக்கட்சி இதர கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அமைக்க நேரிடும்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)