உலகம்

கமலா ஹாரிஸ்க்காக பிரச்சாரம் செய்த மிஷெல் ஒபாமா 

27/10/2024 02:38 PM

மிச்சிகன் , 27 அக்டோபர் (பெர்னாமா) -- அமெரிக்க அதிபர் தேர்தலில், முன்னாள் அதிபர் டோனல் டிரம்ப்பை எதிர்த்து போட்டியிடும் கமலா ஹாரிஸ்க்கு, மிஷெல் ஒபாமா நேற்று பிரச்சாரம் செய்தார்.

அப்பிரச்சாரத்தில், டிரம்பிற்கு வழங்கும் வாக்கு, அமெரிக்க பெண்களின் ஆரோக்கியத்திற்கு எதிரானது என்று மிஷெல் கூறினார்.

''எனவே, தயவுசெய்து, நம்மைப் பற்றி எதுவும் தெரியாத டிரம்ப் போன்றவர்களிடம் நமது எதிர்காலத்தை ஒப்படைக்காதீர்கள். அவர் நம்மீது அவமதிப்பைக் காட்டினார். அவருக்கான ஒரு வாக்கு நமக்கு எதிரானது. நமது ஆரோக்கியத்திற்கு எதிரானது, நமது மதிப்புக்கு எதிரானது,'' என்றார் அவர்.

அமெரிக்கா, மிச்சிகனில் ஹாரிசுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் உரையாற்றும் போது மிஷெல் ஒபாமா அவ்வாறு கூறினார்.

அடுத்த மாதம் நவம்பர் ஐந்தாம் தேதி நடைபெறும் அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டோனல்ட் டிரம்ப்பும் ஜனநாயகக் கட்சி வேட்பாளரும் தற்போதைய துணையதிபர் கமலா ஹாரிசும் போட்டியிடுகின்றனர்.

இறுதி கட்ட பிரச்சாரங்களில் ஈடுபட்டு வரும் இரு வேட்பாளர்களும் ஒருவரைக்கொருவர் குற்றம் சாட்டி ஆதரவை தேடி வருகின்றனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)