கோலாலம்பூர், 29 அக்டோபர் (பெர்னாமா) -- ரோன் 95 பெட்ரோலுக்கான இலக்கிடப்பட்ட உதவித் தொகையை அமல்படுத்துவதில் 85 விழுக்காடு மக்களின் நலனை அரசாங்கம் தொடர்ந்து பாதுகாக்கும்.
T15 பிரிவினர் உட்பட வெளிநாட்டவர்களுக்கு மட்டுமே உதவித் தொகை இல்லாத சந்தை விலை விதிக்கப்படுவதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
" உதவித் தொகை 85 விழுக்காட்டு மக்களுக்குச் சுமையாக இருக்காது. எனவே, அதிகமான எதிர்கட்சியினர் குரல் எழுப்பி வருவதுபோல நாம் துணிச்சலான T15 பிரிவினராக இருக்க வேண்டாம். குறைந்த வருமானம் பெரும் T15 பிரிவினருக்கு சுமையை ஏற்படுத்த வேண்டாம் என்று கூறினால் என்னால் ஏற்றுக் கொள்ள முடியும். அதனால்தான், T20-இல் இருந்து T15ஆக மாற்ற நாங்கள் முடிவெடுத்துள்ளோம், '' என்று அவர் மேலும் கூறினார்.
இன்று செவ்வாய்க்கிழமை மக்களவையில் ரோன் 95 பெட்ரோலுக்கான இலக்கிடப்பட்ட உதவித் தொகை விவகாரத்தில் T15 பிரிவினரின் வரையறை குறித்து கோத்தா மலாக்கா நாடாளுமன்ற உறுப்பினர் கோ போய் தியோங் எழுப்பிய கேள்விக்கு டத்தோ ஶ்ரீ அன்வார் அவ்வாறு பதிலளித்தார்.
அரசாங்கம் ஆண்டுக்கு சுமார் 2,000 ஆயிரம் கோடி ரிங்கிட் செலவை ஏற்க வேண்டி இருப்பதால் இலக்கிடப்பட்ட உதவித் தொகையை அமல்படுத்த வேண்டிய கட்டாயம் இருப்பதாக அவர் விளக்கினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)