கோலாலம்பூர், 29 அக்டோபர் (பெர்னாமா) -- இதனிடையே, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை, PMKS உட்பட இதுவரை பெறப்பட்ட மேல்முறையீட்டைக் கருத்தில் கொண்டு இதற்கு முன்னர் ஐந்து விழுக்காடாக நிர்ணயிக்கப்பட்ட ஈவுத்தொகை வரி இரண்டு விழுக்காடாக குறைக்கப்பட்டதை டத்தோ ஸ்ரீ அன்வார் சுட்டிக்காட்டினார்.
PMKS-சிற்கும் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை தொடர்ந்து ஈவுத்தொகை வரியிலிருந்து விலக்கு அளிக்குமாறு PMKS மேல் முறையீடு செய்ததாக அவர் தெரிவித்தார்.
"... பட்டியலிடப்பட்ட நிறுவனங்களை விட வேறுபட்ட காரணங்களுக்காக PMKS மேல் முறையீடு செய்துள்ளது. அவர்கள் சில நேரங்களில் சிறிய ஊதியத்தை எடுத்துக்கொண்டு, தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்ய சேமித்து வைத்திருப்பதாக வாதம் உண்டு, " என்று அன்வார் கூறினார்.
இன்று, மக்களைவையில் கோத்தா மலாக்கா நாடாளுமன்ற உறுப்பினர் கோ போய் தியோங் எழுப்பியக் கேள்விக்கு டத்தோ ஸ்ரீ அன்வார் அவ்வாறு பதிலளித்தார்.
பசீர் புத்தே நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ டாக்டர் நிக் முஹம்மது ஜவாவி சாலே எழுப்பிய கூடுதல் கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், 2025 வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட இரண்டு விழுக்காட்டு ஈவுத்தொகை வரியை அமல்படுத்துவது தொடர்பான பரிந்துரையை ஏற்க அரசாங்கம் தயாராக உள்ளதாக தெரிவித்தார்.
20 லட்சம் ரிங்கிட் வரையிலான பங்குகளை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே ஈவுத்தொகை வரி விதிக்கப்படும் என்றும் அன்வார் விவரித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)