பொது

மின்னேற்ற நிலையங்களை மேம்படுத்துவது தீவிரப்படுத்தப்படும்

29/10/2024 07:08 PM

புத்ராஜேயா, 29 அக்டோபர் (பெர்னாமா) -- 2025 ஆசியானிற்கு தலைமையேற்கும்போது, மின்னியல் வாகனங்கள், EV-ஐ அதிகாரப்பூர்வ வாகனமாக பயன்படுத்தும் அரசாங்கத்தின் எண்ணத்திற்கு ஆதரவளிக்கும் வகையில், அதற்கான மின்னேற்ற நிலையங்களை மேம்படுத்துவது தீவிரப்படுத்தப்படும்.

தற்போது நாடு முழுவதும் 2,000க்கும் மேற்பட்ட மின்னேற்ற நிலையங்கள் உள்ளன.

மின்சார வாகனங்களைப் பயன்படுத்துவதற்குத் தயாராகும் வகையில், அடுத்த ஆண்டுக்குள் அந்த எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்படும் என்று, துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஃபாடில்லா யூசோப் கூறினார்.

இன்று 2024 உலக நகர்ப்புற திட்டமிடல் தின கொண்டாட்டத்துடன் இணைந்து நடத்தப்பட்ட 2024 தேசிய திட்டமிடல் காங்கிரஸின் தொடக்க விழாவில் கலந்து கொண்டபோது டத்தோ ஸ்ரீ ஃபடில்லா அவ்வாறு குறிப்பிட்டார்.

மின்சார வாகனங்களை அதிகாரப்பூர்வ வாகனங்களாகப் பயன்படுத்துவதை ஊக்குவிக்க தற்போதுள்ள மின்னேற்ற நிலையங்கள் பெரும்பாலும் நகர மையத்தில் உள்ளது போதுமானது என்று அவர் கூறினார்.
-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30  (ஆஸ்ட்ரோ 502)