பொது

மலாக்காவில் ஆங்காங்கே பேருந்தை நிறுத்தும் திட்டத்திற்கு எட்டு கோடி ரிங்கிட்டும் மேலான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது

29/10/2024 07:25 PM

மலாக்கா, 29 அக்டோபர் (பெர்னாமா) -- மலாக்காவில், பேருந்து சேவைக்கான திட்டம் ஒன்றை மேற்கொள்ளும் வகையில், எட்டு கோடியே 37 லட்சத்து 60,000 ரிங்கிட் நிதியை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது.

மக்களுக்கு உத்தரவாதமான சேவையை அளிக்கும் பொருட்டு, ஐந்து ஆண்டுகள் குத்தகையின் அடிப்படையில், இந்த ஒதுக்கீடு தனியார் நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்தார்.

இன்று, மலாக்காவில், அதன் முதலமைச்சர் டத்தோஸ்ரீ அப் ரவுஃப் யூசோப் தொடக்கி வைத்த, மலாக்கா BAS.MY பேருந்து சேவை உருமாற்ற திட்ட தொடக்க விழாவில் அவர் அவ்வாறு கூறினார்

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30  (ஆஸ்ட்ரோ 502)